×

திட்டம்போட்டு பரப்பியதே அமெரிக்க ராணுவம்தான்: சீனா பதிலுக்கு குற்றச்சாட்டு

சீனாவின் வுகான் நகரில் உள்ள நுண்ணுயிரி ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா பரவியது என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தின் ரிசர்வ் படையில் பணியாற்றும் வீராங்கனை பெனாசி என்பவர்தான் சீனாவின் வுகான் நகரில் கொரோனாவை பரப்பியவர் என அங்குள்ள ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.  இதுகுறித்து பெனாசி கவலை தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘‘மார்ச் மாதத்தில் இருந்து இதுபோன்ற தகவல் பரவியுள்ளது. இதனால் எனக்கும் என் குடும்பத்திற்கும் கொலை மிரட்டல்கள் வருகின்றன. நான் வுகானில் நடந்த ராணுவ வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் அமெரிக்கா சார்பில் கலந்து கொண்டேன்.

சைக்கிள் போட்டியில் விபத்துக்குள்ளாகி விலக நேர்ந்துள்ளது. அதுதான் எனக்கும் வுகானுக்கும் இருந்த தொடர்பு. திட்டமிட்டு என் மீது அவதூறு பரப்பப் படுகிறது’’ என்றார்.
இதற்கிடையே, பெனாசி மீது இந்த அவதூறை அமெரிக்கர் ஒருவர்தான் முதலில் பரப்பி உள்ளார் என்றும், சீனாவை கட்டுக்குள் கொண்டு வர பெனாசி மூலம் அமெரிக்க ராணுவம் இந்த வைரசை பரப்பியது என்றும் தனது சமூக வலைதள பக்கத்தில் தகவல் வெளியிட்டது தெரியவந்துள்ளது. அதுகுறித்து அமெரிக்காவில் விசாரணை நடந்து வருகிறது.

Tags : military ,propagator ,US ,China , US Army, China, Corona
× RELATED சுற்றுலா பயணிகளை ஈர்க்க கடலுக்கு...